Wednesday, May 23, 2012

ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும்

சில நேரங்களில், வாழ்க்கை எதிர்ப்பாராத அதிர்ச்சி கொடுக்கிறது. நான் நல்ல திடகாத்திர உடல் வாகுடன், பெரிய வியாதிகளோ உபாதைகளோ இல்லாமல், மும்முரமாக வாழ்ந்த்து கொண்டிருந்தேன்.

 அதில் அலட்டல்,என் வயதில் ஒரு மருந்து மாத்திரை இல்லாமல் இருப்பது என்ற வீண் பெருமை வேறு..

 கடந்த சில ஆண்டுகள், என் வாழ்க்கை ஒரு எதிர்பாரா  திருப்புமுனையில் இருந்தது. விரும்பத்தகாத ஏற்ற தாழ்வுகளை , கொந்தளிப்பு மற்றும் நிறைய மாற்றங்களை துணிச்சலுடனும் மனோ திடத்துடனும் எதிர் கொள்ள நேரிட்டது.

 அப்போது கூட நான் எந்த சுகவீனமும் இல்லை என்று அல்ப மகிழ்ச்சியில் இருந்தேன். திடீரென்று ,  Pride went before the fall. என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப, உடல்நிலை , சோர்வு, வீட்டில் வேலைகளும் , குடும்ப தடுமாற்றங்களும் அலை கழித்தன. அந்த நேரங்களில் வேலையின் காரணமாக , அலைச்சலினாலும் தான் உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதுன்னு, நானே என்னை தேற்றிக் கொண்டேன். வீட்டிலேயும் எப்பவும் இவங்க சொல்ற முனகல் தானே என்று இருந்தனர்.

 இரவு நேரங்களில் உடம்பு சோர்வு, கால் பாதங்கள் ஒரே சூடு வேறே. வியர்வை அடிக்கடி. கால் விரல்கள், அதிக நேரம் வேலை செய்தால் மரத்து போக, ஆரம்பித்தன. இதில் தீபாவளி, விருந்தினர்கள் வருகை, பேத்தி பிறந்த மகிழ்ச்சி, இன்னும் எத்தனையோ காரணங்கள், டாக்டரிட்ம் போகாமலிருக்க .. நாம தான் சொந்த வைத்யர் வேறே. ஹி..ஹி.. எல்லம் சரியா ஆகும் என்று மனதுக்கு தேறுதல் வேறே..

 படித்த, சில பல விஷய ஞானம் இருந்தும் , பயனில்லை. நடுவில் குழந்தையை பார்க்க ஒரு நீண்ட பயணம் !! அங்கே போனதும் உடல் ஒத்துழைக்க மறுத்து , சம்பந்தியும் கவலை பட , ஒரு முடிவு எடுத்தேன், ஊர் திரும்பினதும் டாக்டரை பார்த்தாகணும்னு.


 இப்போ ட்ராமா ஆரம்பம்; அந்த அய்யா நம்மளை பாத்தவுடனே பி.பி. குழாய அழுத்தி ரத்த அழுத்தம் இவ்வளவு முத்தி இருக்கேன்ன போது, நம்ம முகம் பேயறைஞ்சாயிற்று.. அடுத்து, அந்த அய்யா சொன்னது இன்னம் பலத்த அடி. சரி இத்தோட போச்சுன்னு இருக்காதீங்க, சக்கரை, பின்னடியே இருக்குது போல, டெஸ்ட் பண்ணுங்க- ன்னு சிரிச்சுகிட்டே போட்டு உடைத்தார்(ன்)! அவ்வளவு சந்தோசமா எனக்கு வியாதி வந்ததை கொண்டாடினா மாதிரி தெரிந்தது. ( அப்புறம் அந்த ஆளை பார்க்கவேயில்லயே). ஆனால் வியாதி பத்தி இப்படி அதிரடியா சொல்லி பயமுறுத்தின சீனை, எத்தனை நாளானும் மனசிலிருந்து எடுக்க முடியலையே , நாம தான் ஒரே சென்சிடிவ் ஆளாச்சே.



 அதுக்குள்ள, நம்ம குடும்ப வைத்தியர் வந்துட்டாரில்ல. அவர் ஒரு பெரிய பட்டியலை கொடுத்து, மாத்திரைங்க எல்லாம் தின்னு, ஒரு மாதம் கழிச்சு மறுபடி டெஸ்ட் பண்ணுங்க –ன்னு அன்பா சொன்னார். அவருக்கு ஒரு மகிழ்ச்சி தான் , ஏன்னா அவரும் ஒரு டயபெடாலஜிஸ்ட் !

 இனி சாப்பட்டில் இனிப்பு கூடாது, சுகர் ப்ரீ காப்பிக்கு, 5 மைல் நடங்க..எத்தன கட்டளைகளை அள்ளி வீசுராங்க!

 இது நடுவில, நம்ம பேமிலி ப்ரண்டும் ஒரு டாக்டர். அவரும் சக்கரை ஆள்தான். அவரும் தன் பங்குக்கு, ஆறுதல் சொல்லி, இன்னும் சில மருந்துகள் சாப்பிடணும்னு அறிவித்தார். நம்ம ஏகாம்பரமோ, கண்குத்தி பாம்பு மாதிரி , மாத்திரை போடு என்று அதிரடி. நாம்பளும் எல்லார் சொன்னதையும் ஒழுங்கா பாஃலொ பண்ணி, இனிதே (இனிப்பு மைனஸ்) 16 மாதங்கள் கடத்தி.. .


 அப்பாடா மாத்திரைகளை விழுங்கி, சக்கரையை அறவே நிறுத்தி, சக்கரை வியாதியை ஒரு வழி பண்ணி விட்டாச்சுன்னு, சந்தோஷம்


 இந்த கட்டத்தில, பல முறை டெஸ்டிங்க்… திடீர்ன்னு, சக்கரை மறுபடியும் … சோதனைகள் குளுக்கோஸ் அளவு இன்னும் அதிகம் காண்பித்தது நாம் தான் எல்லாத்துக்கு ஒரு விளக்கம் சொல்ல தயாரா இருக்கறமே!

 ‘ ஓ! சில நாளா, சாப்பாடு கண்ட்ரோல் தளர்ந்து விட்டது காரணம் என்று, மனச தேத்தி, டாக்டரிடமும் அதையே சொல்லி என் வைத்திய அஞ்ஞானத்தை வெளி காட்டினேன். அவர் ஒரு நமட்டு சிரிப்பு காட்டி , சுகர் மருந்தை இரட்டிப்பு செய்து, அவருக்கு தெரிந்த கடையிலேயே வாங்கணும்னு, அன்பு கட்டைளயும் இட்டார். நாம்பளும் எல்லோரும் இன்புற்று இருக்க , அப்படியே செய்தாயிற்று..



 கை நிறைய மருந்துகள், மனசில் கொஞ்சம் தயக்கம்.. அதான் .. நம்ப மூளை ஒத்துக்க மாட்டேன்னு … நமக்கு தான் மாத்திரைகள் மீது அவ்வளவா நம்பிக்கை இல்லையே..ஆனாலும் ஏகாம்பரத்தின் முறைப்புக்கு பயந்து , விழுங்க ஆரம்பித்தேன்., மூன்றே நாட்கள் தான், மாத்திரை தின்னாலும் , மயக்கமாக இருக்க ஆரம்பித்தது. படுக்கையிலே படுத்தபடி இருக்க வேண்டியதாயிற்று.

 என்னடா இது? இத்தனை மாத்திரைகள் , ஆனால் ஏன் இப்படி ஒரு சோர்வு, மண்டைக்குள் ஏதோ ஒரு படகில் போகும் ஆட்டம், ஒரே தூக்கம். என் மகளுக்கும் கொஞ்சம் கவலை வந்தது. மனதில் ஒரு யோசனை, இந்த டாக்டர் மிக அதிக அளவில் , வீரியமான மருந்துகளை கொடுக்கும் வழக்கம் உள்ளவர், ஆகவே, நம்ம கணினியை நாடி, தேட ஆரம்பித்தேன். படிக்க , படிக்க , சந்தேகம் வந்தது. மருந்து ஒரேடியாக அதிகப்படுத்தினதால் எனக்கு வந்த விளைவுகள், இருக்கலாம் என்று. மகளும் படித்துவிட்டு, அப்படியே இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாள்.

 உடனே டாக்டரை கேட்டால், அவர், தான் பிஸி என்றும், மருந்தை குறைத்து விடுங்கள் என்றும் கட்டைள இட்டு விட்டு, என்னை பற்றி மறந்து போனார். எனக்கு ஒரே தார்மீக கோபம், என்ன டாக்டர் இவர், பணம் தான் குறி, மருந்து கடை கூட இவர் பரிந்துறைதானே. அதிக டோஸேஜினால் வரும் விளைவுகளை என்னிடம் சொல்லாமல் இருந்ததை பற்றி எரிச்சல் வேறு. பழையபடி, குறைந்த மருந்தினால் வரும் விளைவுகளை யாரிடம் சொல்வோம் என்று தடுமாற்றம்.

 மறுபடியும், தைரியத்தை துணை கொண்டு, நம்ம சமாளிக்கலாம், சாப்பாட்லே கட்டுப்பாடு, வாக்கிங் ..( சர்க்,சரக் .. நடக்குறது அவ்வளவா விருப்பம் இல்லாம)…சில வாரங்களாயிற்று. மறுபடி, ரத்த சோதனை, நமக்கு சோதனை..

இன்னும் ரத்த க்ளூகோஸ் குறையமாட்டேன்னு அடம். இனி என்ன செய்வது? சமையல் செய்யும் போது, நமக்கு ஒன்று, தனியாக யார் செய்வார்கள் என்ற அலுப்பினால், கிடைத்ததை தின்று, அசட்டை வேறு.

 உடல், நமக்கு நினைவு படுத்தும் முறைகள், ஒரு அற்புதம். அதை புரிந்து கொள்வது முக்கியம். சக்கரை நோய் பற்றி விழிப்புணர்வு பெற , நமக்கு அதை பற்றி தெரிந்து கொள்வது முதல் வேலையாக இருக்க வேண்டும்.

 இப்போதெல்லாம் தெருவுக்கு ஒரு டாக்டர் ‘சக்கரை மருத்துவர் என்று பலகை மாட்டி , மருந்துகளை நம் வயிற்றில் போட மிக முனைப்பாக இருக்கிறார்கள். நாமும் இந்த மருந்துகள், நம் உள்ளே சென்று எந்த மாதிரியான மாற்றங்கள் செய்யவாய்ப்புள்ளன என்று தெரியாமலே , நம் உடலை இன்னும் கெடுத்து கொள்கிறோம்.

 மனதில் நச்சரிக்கும் எண்ணங்களை தடுக்க முடியாது, "நான் இதை செய்ய வேண்டும், நான் மருத்துவமனையில் படுக்கையில் முடிவடைய விரும்பவில்லை, நான் மற்றவர்களுக்கு பிரச்சினையாக இருக்க வேண்டாம்" என்று முடிவு செய்து ஒரு பெரிய சாதனை, - முதல் வேலையாக குளுக்கோஸ் மானிட்டர் வாங்கியது.



 இதில் ஏகாம்பரத்திற்கு உடன்பாடு இல்லை. ஏன் இவ்வளவு செலவு, உன்னால் அதை பயன்படுத்த முடியாவிட்டால் வீண்தானே( நம்ம சுபாவம் நம்மளை விட அவங்களுக்கு தெரியும்னு ஒரு நம்பிக்கை தான்.) நாம தான் இதை வாங்கி ஆக வேண்டும்னு அடம் பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தாயிற்று..

 அவரை தவறு என்று நிரூபிப்பதற்றகாகவே, மானிடரை எப்படி பயன்படுத்துவது என்று விழித்து, ஒரு சுப தினத்தில் ஆரம்பித்தேன். (2 மாதங்கள் கழித்து).

 OneTouch அல்ட்ரா 2 புரிந்து கொள்ள முயற்சி;, 

முதல்ல, மீட்டரை வெளீலே எடுத்து, ‘ஆன்’ செய்யணும். ஊசி எடுத்து (மகள் அதை ஏற்கனவே பொறுத்தி வைத்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்து (முருகா மருகா,) கையில் குத்தி ஆயிற்று. ரத்தம் சொட்டு வந்தது. அந்த ‘ஸ்டிரிபை’ (கீற்று) அதன் இடத்தில் குத்தி , ஏதாவது மானிடரில் தெரிகிறதா என்று ஆவலோடு பார்த்தால்… ஒன்னும் இல்லை. அவசரமாக ‘ஸ்டிரிப்’ குப்பையில் போட்டயிற்று.

 ஏகாம்பரத்தின் பார்வையை தவிர்த்து, இனிமே ஏதானும் புது முயற்சி செய்தால், தனிமையில் செய்யணும் - ஜகா வாங்கினேன். அந்த பார்வை கொடுத்த ஊக்கம்(?) , ‘என்னால் முடியும்’ என்று மனதில் வைராக்யம், சில ஸ்டிரிப் வீணா போனாலும், எப்படியாவது , இதை செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் வேறு. அப்போதைக்கு அவசரமாகச் சுருட்டி வைத்து விட்டு, வேலையை பார்க்க போனேன். ஆனாலும் சுய பச்சாதாபத்தில் சில கண்ணீர் துளிகளை தவிர்க்கமுடியவில்லை.

அடுத்த நாள், மீண்டும், "என்னால் இதை செய்ய முடியும் " என்று,மறுமுயற்சி. தவறான பக்கத்தில் துண்டு நுழைத்து, இன்னும் ஒன்று வீணாகிவிட்டது. மரியாதையாக , விளக்க புத்தகத்தை எடுத்து (முதலிலே செய்திருக்க வேண்டிய வேலை) சரியாக படித்து, மறுமுயற்சி!

 துண்டு’ சரியான திசையில் , ஆழமாக நுழைக்க, தானாகவே கருவி, ஆன் ஆயிற்று. இறுதியாக, ‘ மானுவல்’ படிக்க பொறுமை வந்து (சரியாக மற்றும் ஆழமான துண்டு செருகி - அது தானாகவே வரும்), அதை துவக்க, உற்சாகமாக இருந்தது.

 அடுத்து, ‘ லான்சட்’. அதனுடன் தடுமாற்றம்- மேலும் தவறுதலாக 6 நிலைக்கு வைத்து, குத்தி ..’ஊச்ச்’ .. Oooch .. அதிர்ச்சி, நிலை! 3 அல்லது 4 இருத்தல் போதும் . ,சாதனை .! சோதனை செய்ய வந்து விட்டது! ஹையா! -D

 ஆனால் எல்லாவற்றையும் கிண்டலாக , வேடிக்கை யாக பார்க்க முடியவில்லை., மீட்டர் அதிகமாக , மெகா அளவீடுகளை காட்டுது.

 பரவாயில்ல, நம்மதான் உற்சாகத்தில இருக்கிறோமே, எப்படியாவது, இந்த போராட்டம் , செய்து தான் ஆக வேண்டும் , ஒரு வைராக்யம். என் க்ளூகோஸ் எண்கள், சரியான நிலை அடையும் முன் கீற்றுகள் நிறைய வீணடிக்க வேண்டும்.போனால் போகட்டும்.

 இது ஒரு ஆரம்பம்.

 PS: எனக்கு , தற்செயலாக ஒரு பெரீய்ய உற்சாகம் கிடைத்தது- வர்ஷா திவாரி என்றவர் பதிவு (http://wholesomeoptions.blogspot.com/2011/04/eat-your-way-out-of-diabetes.html), என்னை இந்த சக்கரை வியாதியை வேறே கோணத்திலும் அணுக முடியும் என்று வழிகாட்டியது..

 அந்த வலைப்பதிவில் இருந்து வந்த தகவல் ‘ஆலன் ஷான்லே’ வலைப்பதிவு, மற்றும் அவரது புத்தகம் (Alan Shanley “what one earth Can I eat”.) அந்த புத்தகத்தை பத்தி படிச்ச உடனே வாங்கி ஆக வேண்டிய உந்துதல்.

 இது மெலிதான தொகுப்பு, விலை கொஞ்சம் அதிகம், அவர் மீண்டும் மீண்டும் சொல்வது "சோதனை, சோதனை, சோதனை" கீற்றுகள் செலவு , விலை ஒன்றும் சல்லிசாக இல்லை, ஆனால் நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை தெரிந்து கொள்ளவும் , அளவை குறைக்க என்ன செய்யலாம் என்றும் கோடி காட்டுகிறது,

 மேலும் இந்த அளவை குறைப்பதில் நம் பங்கு தான் முக்கியம் என்றும் வலியுறுத்துகிறது. இந்த வேலையை நாம் தான் செய்யவேண்டும் என்பதால், நம் கையில் ஒரு பலம் கிடைத்த மாதிரி ஒரு திருப்தி அளிக்கிறது.

 என் இரத்த குளுக்கோஸ் அளவுடன் சண்டையிட்டு வெல்ல இந்த புத்தக ஆசிரியர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இது ஒரு சவால், ! வாசகர்களே! நான் சமாளிக்க போகிறேன். என்னால் முடியும்.

All images courtesy Google.

 தொடரும்…

36 comments:

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி.
    Please avoid Word Verification in your Commentary Page.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot sir,for promoting my page on your popular and informative blog!



      I already tried to erase the "word Verification". I am sorry. I will do it again!Thanks for pointing it out sir.

      Delete
  2. பலவற்றை அறிந்து கொண்டேன் தொடர்ந்தும் எழதுக
    http://sameer-as.blogspot.com/2012/05/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. வருகைக்கும் , ஊக்கத்திற்க்கும் நன்றி சமீர்!

    தொடர்ந்து எழுத உத்தேசம் இருக்கிறது, கடவுள் அருளினால்.

    தமிழ் தட்டுவது இன்னும் தடுமாற்றம்,எழுத்து பிழையினால் கோளாறுகள். (பல முறை ')delete 'செய்துள்ளேன்;-)

    May 27, 2012 12:27 AM

    ReplyDelete
  4. Sorry for writing in English. Will try next time.

    You have written about diabetes very superbly. You have taken a serious subject and injected some humor. I like that style. Will wait for more on this subject from you.

    ReplyDelete
    Replies
    1. Welcome SG , and thanks a lot for sparing your time. I am glad you liked the post.
      I intend to continue soon, what went on since part 4 months.
      And I welcome the encouragement.

      Delete
  5. சர்க்கரை நோய் என்று அனைவரும் சொல்லும் நீரிழிவு நோய்க்கு காரணம் மரபியலை விட வாழ்வு முறை,சாப்பிடும் பழக்க வழக்கங்கள் ஆகியவைதான் காரணம்.

    இன்னும் டெலிகேட்டான விதயங்களைத் திருமந்திரம் சொல்கிறது,ஆனால் சொன்னால் இக்காலத்தில் கேட்பாரில்லை.!

    ReplyDelete
    Replies
    1. அறிவன் , வருகைக்கு நன்றி.

      திருமந்திரம் சொல்வது என்ன என்பதை தாங்கள் ஒரு பரவலான கண்ணோட்டத்துடன் , பதிவதில் தவறு ஒன்றும் இல்லையே?

      Delete
  6. மிக அருமையான பதிவு . எனக்கும் இதே போன்ற பிரச்சினைகள் தான. ஆனால் இப்போது சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன். உணவுக்கட்டுப்பாடு, வாக்கிங், உட்கொள்ளும் சர்க்கரை அளவைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் கட்டுப் படுத்தலாம்
    உங்கள் அனுபவத்தை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வியபதி! வருகைக்கு நன்றி.
      சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது குறித்து, மிக்க மகிழ்ச்சி.

      ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு, வணக்கம்.

      Delete
  7. உங்களுக்கு நேற்றே பின்னூட்டம் இட்டேன் மா. எங்க போச்சோ. நானும் உங்க சக சர்க்கரை ஆன மனுஷிதான். நீங்க சொல்கிற எல்லா பாட்ட்டையும் 8 வருஷமாப் பாடிக் கொண்டுகிறேன்.
    வெகு கச்சிதமாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வல்லி மேடம்! எத்தனை குஷியா இருக்கு, உங்கள் பின்னூட்டத்தை பார்த்தவுடன்!!

      8 வருடமா? கஷ்டம்தான் இல்லே? நம்மை சுற்றி எல்லாருக்கும் பழகிவிடும். நமக்கு தினமும் மறக்க முடியாது!

      மீண்டும் மீண்டும் வருக என்று வேண்டுகிறேன் ;-)

      Delete
  8. இணையம் தகறாரு மா. முன்பே பின்னுட்டம் இட்டேன். பப்ளிஷை அழுத்துனதும் மறைந்துவிடுகிறது. இப்படிக்கு சக சர்க்கரை மனுஷி.

    ReplyDelete
  9. அதில் அலட்டல்,என் வயதில் ஒரு மருந்து மாத்திரை இல்லாமல் இருப்பது என்ற வீண் பெருமை வேறு..//

    ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸும் இப்படித் தான் அலட்டினார். அப்புறம் பார்த்தால் உடம்பில் ஒரு சர்க்கரை ஆலையையே வைச்சுட்டு இருந்திருக்கார். மூணு வருஷமாப் படாத பாடு பட்டுக் குறைச்சிருக்கோம். இப்போப் பாருங்க போன வாரம் திடீர்னு ஃபாஸ்டிங் ஷுகர் 175னு அடம். இப்போ மறுபடி நடை, உடை, எடைனு .

    சர்க்கரை மட்டும் ஒருமுறை வந்ததோ குறைஞ்சு போச்சாக்கும்னு மறுபடியும் எல்லாத்தையும் சாப்பிட ஆரம்பிக்க வேண்டாம். சென்னையிலேயே இருந்தீங்கன்னா அல்லது தமிழ்நாடோ, இந்தியாவோ எங்கே இருந்தாலும் மாந்துளிர்களைத் துளசி இலைகளோடு கஷாயம் போட்டு வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வரவும். நிச்சயம் பலன் தரும். வெந்தயம் வெறும் வாணலியில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வெந்தயப் பவுடரைத் தயிரோடு சேர்த்துக் காலை வெறும் வயிற்றில் விழுங்கவும். மேலே சொன்ன இரண்டையும் சேர்ந்தே செய்தாலும் சரி, தனித்தனியாகச் செய்தாலும் சரி, சர்க்கரை அளவு குறையும்.

    யோகாசனப் பயிற்சியைச் செய்யவும். விடாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். நான் கட்டாயமாய் அவரை இழுத்துக் கொண்டு போயிடறேன். இல்லைனா வண்டியை எடுப்பார்.

    பயத்தம்பருப்பும், வெந்தயமும் மட்டும் ஊற வைத்து அரைத்து இட்லி செய்து சாப்பிடலாம். அதில் சுவை ஊட்ட, ப.பட்டாணி, காரட், தேங்காய் துருவல், ப,மி. இஞ்சி, வேர்க்கடலைனு போட்டுக்கோங்க. தக்காளிச் சட்னி அல்லது கொத்சோடு சாப்பிடலாம்.

    வெந்தயமும், புழுங்கல் அரிசியும் மட்டும் போட்டு அரைத்துத் தோசை, ஊத்தப்பம், இட்லி செய்து சாப்பிடலாம். வெங்காயம், தக்காளி, கொ.மல்லிச் சட்டினியோடு அல்லது சாம்பாரோடு சாப்பிடலாம். தைரியத்தைக் கை விடாதீங்க.

    சர்க்கரையிலிருந்து மீண்டு வர வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
    Replies
    1. Geetha மேடம்! கண் நிறைஞ்சு போச்சே, பின்னூட்டத்தை படிக்க முடியலையே!

      கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடி படிச்சேன்! சொந்த பந்தங்கள் கூட, இந்த அளவு, டிப்ஸ் கொடுக்க முனையல!
      எல்லாரும், அப்பாட எனக்கு இல்லன்னு இருக்காங்க. சில பேர், ஆமா, இப்போவேல்லாம் எத்தனையோ மாத்தரைகள், போட்டு , படுத்துண்டால், சரியாகிடுமே? கால்வலி , வயித்து வலலீன்னாதான் கஷ்டம்! என்று, அலுப்பு ;-) .

      இந்த குறைபாடுள்ள க்ளூகோஸ் பற்றி அறிந்தவர்கள் தான், இதனால் வரக்கூடிய விளைவுகள் பற்றியும் அறிவார்கள்.

      இப்போது, மிகவும் அளவில் தான் உள்ளது, மாத்திரைகளை போடவேண்டாம் என்பதற்காக முனைகிறேன். அதுபற்றி பின் பதிவுகளில்.

      வணக்கமும் நன்றியும்.

      Delete
  10. மொனிடோர்ருடன் பெரும் போராட்டம் போல! :D பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    நானும் ஒரு குல்கோஸ் மொனிடோர் வாங்க சொல்லி என் அப்பாவிடம் கேட்டிருக்கேரியன்... அவரும் அதோ இதோ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

    எங்கள் மருத்துவரோ இந்த மொனிடோர் செக்கிங் சரியாக இருக்காது என்று சொல்லுவர், அனால் அவரே மொனிடோர்ரில் செக் பண்ணிங்கள என்றும் கேட்பார்.

    Will check the link later

    ReplyDelete
    Replies
    1. ஜீவன்! வாங்க, வாங்க!

      அது ஒரு நாள் போராட்டம்தானே! சமாளிச்சாச்சு, ஒப்போல்லாம் , எக்ஸ்பர்ட்டாக்கும்!
      இந்த மொனிடோர் செக்கிங் சரியாக இருக்காது என்பதும் சரிதான். நான் அவ்வப்போது, லேப் டெஸ்டிங்கும் செய்கிறேன், இது வரை , அதுக வித்யாசம் ஏதுமில்லை.

      அடிக்கடி வாங்க, நன்றி.

      Delete
  11. Its a eye opener for all diabetic patients. Good writing! Congrats Madam.
    Balaraman R
    orbekv.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. Balram sir, Welcome, I am pleased to receive a comment from you.

      Thanks for the encouragement.
      God bless

      Delete
  12. என்றாவது ஒரு நாள் எனக்கும் வரும் என்று காத்திருக்கிறேன் (டையாபடீஸ்). நோயில் விழுவதற்குள் ஏதாவது உருப்படியாய் செய்தாக வேண்டும் என்று தோன்றுகிறது. ம்ம்ம்.......பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தானை தலைவீ, வருகைக்கு நன்றி.

      எதுக்காக வரணும் உங்களுக்கு? அவசியமே இல்லே, பாதுகாத்து கொண்டு ஆரோக்யமாக இருக்கணும்னு, வாழ்த்துகிறேன்க!

      Delete
  13. mika arumai.. nichayam velviingka.. en vaazththukkaL..:)

    ReplyDelete
    Replies
    1. Welcome here Thenammai! A pleasant surprise on such quick response from you.I am delighted.

      Thanks!

      Delete
  14. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

    இதைப்பற்றி நான் சில கருத்துக்களை ஒரு கதையின் மூலம் தெரிவித்துள்ளேன். அதையும் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் நேரம் கிடைத்தால் படியுங்கள்.

    கருத்துக் கூறுங்கள்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/10/15.html பகுதி-1 / 5
    http://gopu1949.blogspot.in/2011/10/2-5.html பகுதி-2
    http://gopu1949.blogspot.in/2011/10/3-5.html பகுதி-3
    http://gopu1949.blogspot.in/2011/10/3-5.html பகுதி-4
    http://gopu1949.blogspot.in/2011/11/5-5.html பகுதி-5

    அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபாலகிருஷ்ணன் சார்.!வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

      கட்டாயம் படித்து, தெரிவிக்கிறேன்.

      வணக்கம்.

      Delete
  15. கீழ்க்கண்ட என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    http://www.blogger.com/comment.g?blogID=1496264753268103215&postID=5950763476771691799&page=1&token=1339142328564

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை படிக்க சான்ஸ் கிடைத்ததே என்று எனக்கு தான் மகிழ்ச்சி! ;-)

      Delete
  16. வெற்றி மகள் அவர்களே! 1972ம் ஆண்டிலிருந்து சர்க்கரை நோயினால் அவதிப்ப்படுபவன். மூன்று நேரமும் இன்சுலின் ஊசி- கட்டுப்பாடுடன் சாப்பாடு.முழுக்க முழுக்க என் துணைவியாரின் உதவியோடு காலத்தை ஓட்டுகிறேன்.பயனுள்ள பதிவு.---காஸ்யபன்.
    (பி.கு. நானும் ஆறு ஆண்டுகள் ஹைதிராபாத்தில் இருந்தவன்.)

    ReplyDelete
  17. வணக்கம் kashyapan சார்.
    ஹைதிராபாத்தில் இருந்தவர் என்றால், உடனே ஒரு சின்ன மகிழ்ச்சி, அட!

    சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கடினம். அதை கடைப்பிடிக்கும் உங்களுக்கு, என் பாராட்டுக்கள். உங்கள் துணைவியாரின் பங்கும் பாராட்டுக்குரியது!

    என் பதிவுக்கு வந்து , பின்னூட்டம் அளித்து என்னை கௌரவித்ததற்கு, நன்றி.

    ReplyDelete
  18. முதலில் படிக்கும்பொழுது ஓர் ஆடவர் என்றுதான் நினைத்தேன். படித்தபின் ஆடிவிட்டேன். துன்பியலைக்கூட நகைச்சுவையோடு கூறிய பாங்கு மிக நன்று. கருத்துக்கள் என்னுடைய எண்ணத்தின் xerox ஆக இருந்தது. நான் ஒரு B.P. and More Platelet Count Patient தாங்கள் குளுக்கோஸ் மானிட்டர் வாங்கியது பற்றிக் கூறினீர்கள். நான் ஒரு B.P. மானிட்டர் பார்த்துவிட்டு அலறி அடித்துக்கொண்டு டாக்டரிடம் சென்று dose (திட்டு) வாங்கியதை நினைத்துப் பார்த்தேன். அருமையான பதிவு. தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. ARUNMOZHI DEVAN
      அருண்மொழி தேவன் , வருகைக்கு நன்றி.


      கருத்துக்கள் நம் எண்ணம் போல இருந்தால்,மகிழ்ச்சியாக இருப்பதை நானும் பலமுறை அனுபவித்து இருக்கிறேன். நீங்கள் அழகாக வெளிப்படுத்தியதை ரசித்தேன்.

      உங்கள் பின்னூட்டம் உற்சாகம் கொடுக்கிறது. மீண்டும் வருகை தந்து , உங்கள் கருத்துக்களை பகிர, வரவேற்கிறேன்.

      Delete
  19. அன்புள்ள பட்டு,
    உங்களின் இந்தப் பதிவை இன்றைய வலைசரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html

    வருகை தருக,

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரன்ஜனி,மிக்க நன்றிமா!. இப்போது தான் பார்த்தேன். ஆச்சரியம்!, மகிழ்ச்சி, 'என் பதிவா' என்று மலைப்பு, தகுதி உள்ளவள் தானா என்ற கேள்வி, ....

      கட்டாயம் ,தமிழ் பதிவுகள் இன்னும் எழுத , ஊக்கம் கிடைத்துள்ளது.;-)

      Delete