Friday, June 15, 2012

ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும் - 2


சரீங்க! எவ்வளவு அதிக சுகர் இருந்தாலும் எவ்வளவு நாளா இருந்தாலும், மாற்றங்களால் இதை மறுபடியும் கட்டுக்குள் கொண்டு வர , சில வழிமுறைகள் உள்ளன.

டயடீசியன் சொன்னதையும் டாக்டர் சொன்னதையும் , பின்பற்றி, வேறே மாற்றங்கள் செய்ய தயங்குபவர்களுக்கு , என் , குறிப்புக்கள், பயனில்லை.

Alan shanley சொல்வதை , பின்பற்ற, கொஞ்சம், அதிக முயற்சி எடுத்தால், ஆரோக்யம் முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்கும், தயாரா?

உங்களை ஒன்னும் ஒலிம்பிக்ஸ் ஓடவோ,இலை, தழை மாத்திரம் சாப்பிடவோ சொல்லப் போவதில்லை. ஒரு சில மாத்தம் செஞ்சு, நம்ப நம்ப திண்டி,  நமக்கு சாதகமாகி நாம்ப, இன்னும் பல வருடங்கள் இந்த diabetes- கூடவே , வாழ்க்கை நடத்த முடியுமே.,என்ற சபலம் தான். ஆசை யாரை விட்டது?

Type 2 diabetes உள்ளவர்கள், நீண்ட கால திட்டமாக, ஒரு ஆரோக்யமான உற்சாகமான வாழ்க்கை வாழவும், blood glucose அளவு கட்டுப்பாட்டில் வைக்கவும், வீட்டில், சோதனை செய்யவது, உடல் எடையை கட்டுப்படுத்தவது, மிதமான உடற் பயிற்சி செய்வது போன்வற்றை கடைபிடிக்க வேண்டியது மிக நன்று.

அவ்வபோது , பரிசீலிக்க வேண்டியவை; வெறும் வயிற்று பரிசோதனை, சாப்பாட்டுக்கு முன்னால், பின்னால், அவ்வப்போது, சோதனை, (எல்லாம், Blood glucose test meter,வழியாக). HbA1C test - மாசத்துக்கு  ஒரு முறை.

பொதுவாக டயட்டீசியன், ‘ஒரு சரிவிகித உணவு சாப்பிடணும், கொழுப்பை தவிர்க்கணும், தானியங்கள் சேர்க்கணும், பழம் காய்கறிகள், சேத்துக்கணும்’ என்று, அறிவுறை கொடுப்பார்கள்.
சரி, கொஞ்ச நாட்கள் கழித்து , டெஸ்ட், பண்ணால், அதிக மாற்றம் இல்லாமல் போகும் !.
என்னதான் செய்யலாம் என்று நெட்டில் மேய்ந்தாலோ, மறுபடி கன்சல்ட் செய்தாலோ, ‘அதிக கார்போ(மாவு சத்து, ) சாப்பிடுங்கள்’ என்று யோசனை வரும்.


எல்லாருக்கு, ‘கொழுப்பு, குறைந்த, அதிக மாவு சத்து மிகுந்த ‘ டயட், ஒவ்வாது. எத்தனை குறைத்து சாப்பிட்டாலும், சுகர் மாத்திரம், , விட்டேனா பார்னு அடம் பிடிக்கும், வாய்ப்புக்கள் இருக்கலாம்..

இதை பற்றி , ‘Usenet’s diabetic groups’  ல் கிடைத்த தகவல் கச்சிதம். இந்த க்ரூப்,  நம்மை போலவே, பேந்த பேந்த விழிக்கும், பலர், அவர்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் ஓரிடம். இதை ஆரம்பித்தவர் ஜெனிபர். ஒரு எளிமையுடன் இவர் சொல்லும் கருத்துக்கள், அருமை.:
தலையாய கருத்து ; ‘டெஸ்ட் பண்ணுங்க!!’
‘ஏன்னா, நீங்க சாப்பிடற உணவு, சக்கரையாக மாறி, எது வறையில் நிக்குது என்று டெஸ்ட் பண்ணுங்க. அதை குறித்து வைத்துக் கொள்வது அவசியம்.’
‘சாப்பாடு, எல்லா நாட்களுதம் எல்லா வேளைகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரே சீராகவும் செரிக்காது. ஆகையால், மறுபடியும்,  விளைவுகைள டெஸ்ட் பண்ணுங்க. பண்ணி, மறக்காம குறித்துக் கொள்ளணும் ‘.
‘சுகர் நமக்கு சாதகமான லெவலுக்கு வந்ததான்னு பார்க்கணும்.’
இந்த முறை மிக சுலபமானது, எளிமையானது, சக்தி வாய்ந்தது. ஒரு அதிசியம் என்னான்னா இந்த ரீடிங்க், ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்,
ஒவ்வொரு தனி மனிதரின் உடல் எவ்வாறு அவர் உட்கொள்ளும் உணவை மாற்றுகிறது என்பது தெரிய வரும், எந்த உணவை சாப்பிட்டால் சுகர் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெளிவாகும்.

உங்கள் உடலின் மாற்றங்களை உணர சோதனை செய்யுங்கள். 

 டெஸ்டிங், டெஸ்டிங் டெஸ்டிங் இது தான் மந்திரம்.’

முதல் குறிக்கோள், எதுக்காக  ரத்தத்தில் உள்ள க்ளூகோஸ் பத்தி இவ்ளோ தகவல் அவசியம்?

டாக்டர்களும், மற்றவர்களும், நம்ம ‘சுகர்’ சங்கதி தெரிய வந்தவுடனே, தொண்டை கிழிய எதை எல்லாம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில், அவர்கள் சொல்வதை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள், நமக்கு தானே தெரியும்.
அதிலும் ‘கொழுப்பை அகற்று’ என்பது மகா தலைவலி. நம்ம கலாசார, உணவு முறைகளை ருசி கண்ட நாக்கு ஒத்துழைக்காமல், பழைய படி சாப்பிட்டு விட்டு, குற்ற உணர்ச்சியில் , சக்கரை அளவு அதிகமாக … இது, ஒரு வகை.


இதே சாப்பாட்டுகளை அளவோடு உண்டு, மீட்டரில், அவ்வப்போது செக் பண்ணும் போது, ரிசல்ட பாத்தா , சில பல சாப்பாட்டு அட்வைஸ்களை, ரொம்ப சீரியஸா எடுத்துக்க  வேணாமேன்னு, முடிவுக்கு வரும்  சாத்தியங்கள் உண்டு.

 ஆகையால் சாப்பாடுங்கறது, நம்ம (தனி மனிதரின்) உடல் எப்படி, எடுத்து கொள்கிறது என்று கண்டறிவது முதல் வேலை.

Blood glucose testing monitor ;

இது நம் டயபடீஸ் போரில் கை கொடுக்கும் ஆயுதம். இப்போதெல்லாம் வெளி நாடுகளில், பரிசோதனை நிலையத்திற்கு, அதிகமாக யாரும் போவதில்லை. வீட்டிலேயே, மானிடரில், சுகர், ரத்த அழுத்த தொல்லைகளை , கண்டறியும்  வசதி இருக்கிறது,
இந்த வசதிகள், இப்போது , இங்கேயும் எளிதில் வாங்க முடிகிறது.
நம் உடல் நலனை பற்றியதால் ,விலையும் அவ்வளவு அதிகமாக , கையை கடிப்பதாக படுவதில்லை. வாங்கி , அதை உபயோகிக்கும் விதம் எப்படி என்று அறிந்து கொள்ளவேண்டும்.

அடுத்தது உடல் எடையை , கட்டுப்படுத்தறது.
எப்படி என்பது நம்ம கையில் தான், அத்துடன் சீரான உடற் பயிற்சி( குறைஞ்ச பட்சம், அரை மணி , மிதமான வாக்கிங்) கட்டாயம் !!!!.


இந்த சாப்பாடு பட்டியலில் எதை சேக்கறது,  விடறது என்று, கொஞ்சம் குழப்பம் வருவது சகஜம்.

உள்ள தள்ற உணவை, ஒரு கணக்காக ,குறித்துக் கொள்வது, முக்கியம்.எதை சாப்பிட்டோம் என்ன மீட்டர் தகவல், என்ன மாற்றங்கள் செய்யலாம் ‘போர’டிக்காமல், எப்படி புது வகை உணவுகளை புகுத்தலாம், யோசனை செய்து ,, உணவு வகைகளை, திட்டமிட்டு, உண்டு, மகிழலாம்.  ( அடேடே! சுலபம் தான் போல !!!)

சரி,இப்ப எத்தையெல்லாம் சாப்பிடலாம்னு, ஒரு பார்வை.


இந்த விஷயம் எரிச்சலூட்டுவது. ‘குறைந்த கொழுப்பு, குறைந்த கலோரி, டைப் சாப்பிடுங்கள், என்று, எல்லாம் தெரிந்சவங்க, அடிக்கடி அதட்டுவாங்க. இந்த முறையில் சாப்பிட்டாலும், வயறும் , நாக்கும், மக்கர் பண்ணும், சுகரும் குறைவதில் அடம் பிடிக்கும். தலை மயிரை பிய்த்து கொண்டு, இன்னும் மாத்திரைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் கதி பல பேருக்கு நேரிட்டிருக்கலாம். ( அப்படி இருந்திருந்தால் கொஞ்சம் பின்னூட்டதுதில் பகிர்ந்தால் நன்னாயிருக்குமே)!.

சாப்பாட்டில், சுகர் குறைகிறதா என்ற ஒரே குறிக்கோளுடன், எத்த தின்னால் சுகர் குறையும் என்ற வகைகளை நாமே பட்டியல் செய்யலாமே,


இதற்கு,Jennifer-ன் , “test , test and test” முறை கடைபிடித்து வெற்றி பெற்று பல வருடங்களாக , சக்கரை அளவே ஒரே சீராக வைத்துள்ளவர்களில், ஆலனும் ஒருவர்.
ஆலன் சொல்வதன் சாராம்சம்;
,முதலில் வெறும் வயிற்றில் , டெஸ்ட். அப்புறம் சாப்பாட்டுற்கு ஒர் மணி நேரம் கழித்து, ;
இந்த டெஸ்டினால் எந்த உணவு ஒத்துக்கொள்கிறது,  (சக்கரை அளவை அதிகமாக்காமல்) எந்த உணவு ஒத்துகொள்ளவில்லை என்று அறிய முடிகிறது.
கார்போ உணவு அளவை கணக்கிட எண்ணிலடங்கா முறைகள் பயனுள்ளதாக இருந்தாலும், அது உள்ளே போனவுடன்,  நம் உடல் மீது எத்தனை அளவில் பயன் அல்லது கெடுதல் என்பதை  தெரிந்து கொள்வது கடினமே!
ஆனால், மீட்டரில் பார்க்கும் போது நமக்கு உடனே முடிவுகளை காண்பிக்கும். க்ளூகோஸ் உச்சத்தில் இருக்கும் போது (உணவின் பிறகு,), பரீட்சை செய்து,அதிகமாக இருந்தால் , உணவில் மாற்றங்கள் செய்ய சுலபம்.

பல முறை  டெஸ்ட் செய்தால், அதே முடிவுகளை பெற வாய்ப்பு உள்ளது.
இங்கே ஒரு சின்ன குறிப்பு, அது உங்கள் உடல்நிலைக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நண்பர்களுக்கோ, உறவினருக்கோ , இதே டயபெடீஸ் உள்ளவருக்கோ, அது வேறே மாதிரியான முடிவுகளையே காட்டும் சாத்திய கூறுகளே அதிகம்.


நம்ம மாதிரியே, சுகர் இருக்கும்  நண்பர், எப்போதும் ‘இதை சாப்பிடு, நான் சாப்பிடுகிறேனே, நமக்கு நல்லது தான்,;ஏன் இதை சாப்பிடுகிறாய், ஒதுக்கு, ன்னு, , நம்ம போற, விசேஷத்திலே எல்லாம், உரக்க சொல்லி சக விருந்தினர்களுக்கு, ஒரு தமாஷான சூழ்நிலையை உண்டாக்கி புண்ணியம் கட்டும்போது, ‘டெஸ்டிங்’ மகிமையை அவருக்கு சுட்டி காமிக்கறது, ஒரு சந்தோஷம்!!'

தொடரும்...

பின் குறிப்பு. இது என் அனுபவங்கள். மேலும் விவரங்களுக்கு , ஆலனின் புத்தகத்தை படிக்கவும். அவரது பதிவுகளும் உண்டு. எந்த மாதிரி மாற்றத்தையும், டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது தேவை.


24 comments:

 1. //பின் குறிப்பு. இது என் அனுபவங்கள்.//

  அனுபவங்கள் காடும் பதை தானே அய்யா சிறந்த வழித்துணை, அருமையான பதிவு, சர்க்கரை நோயாளிகள் என்று இல்லை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்

  படித்துப் பாருங்கள்  தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்

  ReplyDelete
 2. சீனு ! உங்கள் பின்னூட்டம் , எனக்கு யானை பலம்! நன்றி.

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள பதிவு.

  சர்க்கரை நோயாளிகளின் பிரச்சனைகளைப் பற்றி என்னுடைய சிறுகதையான “நீ முன்னாலே போனா ... நான் பின்னாலே வாரேன்” என்பதில் பலவிஷயங்களை ஆங்காங்கே சுட்டிக் காட்டி எழுதியிருந்தேன்.

  அது பலராலும் பின்னூட்டமிட்டு பாராட்டப்பட்டது.

  நேரமிருந்தால் தாங்களும் படித்துப்பார்த்து கருத்துக்கூறவும்.

  இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/10/15.html

  ReplyDelete
  Replies
  1. http://gopu1949.blogspot.in/2011/11/5-5.html
   கோபாலகிருஷ்ணன் சார், மேலே குறிப்பிட்ட இணைப்பில் , என் பின்னுட்டம் செய்துள்ளேன் .

   வணக்கம்.

   Delete
 4. ஆகாரக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள், அவ்வப்போதோ மாதம் ஒரு முறையோ மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவர் அலோசனைப்படி மருந்து மாத்திரைகள் இன்சுலின் ஊசி இவற்றுடன் சர்க்கரை நோய் பற்றிய பொதுவான ஓர் விழிப்புணர்வும் அவசியம்.

  ஒவ்வொருவருக்கு இது ஒவ்வொரு விளைவை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

  ஒருவர் மற்றொருவருக்கு இதைச்சாபிடு அதைச்ச்சாப்பிடு என்று ஆலோசனைகள் சொல்வதோ உபதேசங்கள் செய்வதோ கூடவே கூடாது.

  மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அதை சரியாக கண்டிப்பாக கடைபிடிப்பதே சிறந்த வழியாகும்.

  நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோபாலகிருஷ்ணன் உங்கள் பாராட்டு, உற்சாகம் கொடுக்கிறது சார்!

   நான் ஏற்கனவே, உங்கள் பதிவை படித்து, பின்னூட்டமிட்டேன். மறுபடியும் செக் பண்ணுகிறேன் சார்!

   நமஸ்காரம்.

   Delete
 5. VetrimagalJune 16, 2012 8:25 PM
  //http://gopu1949.blogspot.in/2011/11/5-5.html
  கோபாலகிருஷ்ணன் சார், மேலே குறிப்பிட்ட இணைப்பில் , என் பின்னுட்டம் செய்துள்ளேன் .

  வணக்கம்.

  நான் ஏற்கனவே, உங்கள் பதிவை படித்து, பின்னூட்டமிட்டேன். மறுபடியும் செக் பண்ணுகிறேன் சார்!

  நமஸ்காரம்.//

  பார்த்தேன்.
  பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள்.
  நானும் பதில் அளித்துள்ளேன்.
  மிக்க நன்றி.
  vgk

  ReplyDelete
 6. Very well written. Looking forward to read more on this from you.

  I am not a doctor. But I can tell that for (us) Indians, especially South Indians, rice is the biggest enemy. Rice raises the blood sugar level very fast.

  Lot of people would say “stop eating rice” and “eat lot of fruits and vegetables”. That is also not 100% true. We should look at the glycemic index of a food. It is better if a food has low glycemic index. It is about the quality of carbohydrates and not the quantity. The lower a food's glycemic index, the less it affects blood sugar and insulin levels.

  Take for example GI for fruits. Dates (100), Parsnips (97), Watermelon (72), Peach (28), Grapefruit (25), and Cherries (22). We know the first 3 are bad for us and the last 3 are good for us.

  You can google for a list of GI for all food products.

  ReplyDelete
 7. Getting a comment form people who have a good grip of the subject, gives immense satisfaction.

  Thanks SG!

  Yes, what you said is very true.Now whatever I eat, I consider , it GI, and then eat,and then test. Some of them agree.. and I eat more of it.
  Sometimes, out of frustration, I eat normal stuff, and get the sugar level zoom.. It is tough , but I am getting there.

  I have so much of information,collected from Google, I am finding it head churning (thalai suttal ), :-) . I am trying to sift, co-relate and find out what works for me.

  That is why , I am trying Alan's method, and found a small success. I was impatient to share it with readers, and started this series.

  Please do give your views , and encourage me.

  ReplyDelete
 8. I read your post interesting and informative. I am doing research on bloggers who use effectively blog for disseminate information.My Thesis titled as "Study on Blogging Pattern Of Selected Bloggers(Indians)".I glad if u wish to participate in my research.Please contact me through mail. Thank you.

  ReplyDelete
  Replies
  1. Welcome here Priyarajan. Thanks for your response.
   I will def. contact you by mail. All the best.

   Delete
 9. This is a very useful post, very well analysed post. Thank you, Vetrimagal.

  ReplyDelete
  Replies
  1. Welcome here Sandhya, and thanks for your good words!.

   Delete
 10. நல்ல பதிவு.
  சர்க்கரை நோய் விழிப்புணர்வு பதிவு தேவையான ஒன்று.

  ReplyDelete
 11. வாங்க கோமதி அரசு!
  உங்கள் பின்னூட்டம் பார்த்தவுடன், மகிழ்ச்சிஆக இருக்குது.

  ReplyDelete
 12. Your postings in a jovial mood but at the same time educative are really nice to read. நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்
  Visit my blogs at:
  svsaibaba.blogspot.com English
  svsbaba.blogspot.com Tamil

  ReplyDelete
 13. அருமையான பதிவு மா.
  எட்டு வருடங்களாகத் தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்.

  டைப் 2 என்று பெயர் வைத்த பிறகு நான் ஏஏற்றுக்கொண்ட புத்திமதிகள் எவ்வளவோ.
  ஓட்ஸ் ஒத்துக் கொள்வதில்லை.
  என்று சொன்னால் வைத்தியர் என்னை விநோதமாகப் பார்க்கிறார்:)
  சிலசமயம் ஸ்ட்ரெஸ் அதிகமானல் கூடவே ஏறும் ஷுகரும் ,ப்ரஷரும்:)
  ஆளைவிடுப்பா.

  ReplyDelete
  Replies
  1. வல்லி..நிஜம்தான். ஸ்ட்ரெஸ் ஏறினாலும் , சுகர் ஏறுகிறது. எல்லாரும் 'உனக்கு என்ன ஸ்ட்ரெஸ் ' என்று கேள்வி வேறே!

   எது பிடிக்கவில்லையோ, ஒத்துக்கொள்ளவில்லேயோ, அதை யான் தவிர்த்து, அரிசி, கோதுமை, தானியங்க வகைகளை, மிக குறைவாகவும், பருப்பு வகைகளை , பல விதங்களில் சேர்த்து ஆரோக்யமாக இருக்க முயற்சி கண்டு, ஓரளவுக்கு வெற்றி!

   தினம் பாடு தான், ஆனால், உடம்பு களைப்பில்லாமல் இருப்பது மகிழ்ச்சி!

   Delete
 14. http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

  Dear Pattu,

  I WOULD LIKE TO SHARE ANOTHER AWARD WITH YOU.

  PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.

  THANKING YOU,
  VGK

  ReplyDelete
  Replies
  1. Sir, I am a small speck of dust, in this world of Tamizh bloggers. You have been extremely kind to include me , in sharing this award, with a reputed list of Tamizh bloggers.

   Thanks a lot sir. Namaskaram.

   Delete
 15. இராஜராஜேஸ்வரி

  Thanks a lot for bringing this to my notice. Sir is magnanimous to share this with me!
  And great to see your blog , on top of the list. Congratulations, Your blog is worthy of it!

  ReplyDelete
 16. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது
  தினபதிவு திரட்டி

  ReplyDelete